எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம்
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம்
குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
இன்னும்(எத்தனைக்)
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே