மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
உள்ளம் துடித்துக் கொண்டே இருக்கும்
கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்
தென்றல் தழுவிக் கொண்டே வரும்
இரவைக் கண்டே பெண்மைதவித்துக் கொண்டே இருக்கும்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
ஆயிரம் யானை பலமிருக்கும்
அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
தாயின் பாசம் நிறைந்திருக்கும்
தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
இன்று கூட்டுக்குள்ளே இருக்கும்
நாளை வீட்டுக்குள்ளே இருக்கும்
எங்கள் கூட்டுக்குரல் இன்பக்கோட்டைக்குள்ளே
என்றும்கேட்டுக்கொண்டே இருக்கும்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்