நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார் ஹாஹ…
உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ ?
எதிர்ப்பார் யார் யாரோ ?
இனியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் நாளை யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் முடிந்தார் யார் யாரோ ?
முடிந்தார் யார் யாரோ ?
நான் யார் நான் யார் நீ யார்?