பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ கதைகள் கூறுது
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
பெண்மனது ஊஞ்சலாடுது
அதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வந்தது
உன் ஆடை தொட்டு ஆடுகின்றது
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
காளையுள்ளம் வாடுகின்றது
எண்ணம் கரை கடந்து ஓடுகின்றது
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது