நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!
ஏன் பிறந்தோம்
என்றே இருந்தோம்
கண் திறந்தோம்
அவ்வான் பறந்தோம்
மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில் - பூமி
சுற்றப் பார்க்கிறோம்
விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே!
Cafe beach இலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wall இலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்
இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே !!!