Kilimanyajaro

கிளிமஞ்சரோ
Work
Year
Language

ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…
கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தல வேக வச்சு
சிங்கபல்லில் உரிய்யா
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மலைபாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டி யென்ன
சூப்பு வச்சு குடிய்யா
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

ஏவாளுக்கு
தங்கச்சியே யெங்கூடதான்
இருக்கா
ஆளுயுர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா?

அக்கக்கோ – அடி
கின்னிகோழி
அப்பப்போ – யென்ன
பின்னிகோடி
இப்பப்போ – முத்தம்
எண்ணிகொடி!
அக்கக் எண்ணிக்கோ நீ

கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ

கொடி பச்சையே ஓ.. ஹோ..
எலுமிச்சையே ஓ.. ஹோ..
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை!

இனிச்சக்கீர ஓ.. ஹோ..
அடிச்சக்கரே ஓ.. ஹோ..
மனச ரெண்டா ஓ.. ஹோ..
மடிச்சுக்கிரே

நான் ஊர வைத்த
கனி – என்னை மெல்ல
ஆற வைத்து கடி!

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் – நீ
இலைதிரை ஏன் இட்டாய்?
உதட்டையும் உதட்டையும்
பூட்டி கொண்டு – ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்!

அக்கக்கோ – அடி
கின்னிகோழி
அப்பப்போ – யென்ன
பின்னிகோடி
இப்பப்போ – முத்தம்
எண்ணிகொடி!
அக்கக் எண்ணிக்கோ நீ

கிளிமஞ்சரோ – மலை
கனிமஞ்சரோ – கன்னக்
குழிமஞ்சரோ
யாரோ யாரோ
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

மொகஞ்சதரோ – உன்னில்
நொழஞ்சதரோ பைய
கொழஞ்சதரோ யாரோ யாரோ

சுனைவாசியே ஓ.. ஹோ..
சுகவாசியே ஓ.. ஹோ..
தோல்கருவி ஓ.. ஹோ..
எனைவாசியே
என் தோல்குத்தா பலா – றெக்கைகட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நான் ஓ.. ஹோ..
மரங்கொத்தி நீ ஓ.. ஹோ..
வனதேசம் நான் ஓ.. ஹோ..
அதில்வாசம் நீ

நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி
யாரு நான் தான் உடை!

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

அக்கக்கோ – நான் கின்னிகோழி
அப்பப்போ – என்ன
பின்னிகோ நீ
இப்பப்போ – முத்தம்
எண்ணிக்கோ நீ
அக்கக் எண்ணிக்கோ நீ

ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…

அக்கக்கோ – அடி
கின்னிகோழி
அப்பப்போ – யென்ன
பின்னிகோடி
இப்பப்போ – முத்தம்
எண்ணிகொடி!
அக்கக் எண்ணிக்கோ நீ 

āhā… āhā… āhā… āhā…
kiḽimañjaro – malai
kaṉimañjaro – kaṉṉak
kuḻimañjaro
yāro yāro
āhā… āhā…
āhā… āhā…

mŏgañjadaro – uṉṉil
nŏḻañjadaro paiya
kŏḻañjadaro yāro yāro
āhā… āhā…
āhā… āhā…

kāṭṭuvāsi kāṭṭuvāsi
paccaiyāga kaḍiyyā
muttattala vega vaccu
siṅgaballil uriyyā
āhā… āhā…
āhā… āhā…

malaibāmbu pola vandu
māṉkuṭṭiya puḍiyyā
sukkumiḽagu taṭṭi yĕṉṉa
sūppu vaccu kuḍiyyā
āhā… āhā…
āhā… āhā…

evāḽukku
taṅgacciye yĕṅgūḍadāṉ
irukkā
āḽuyura āliv paḻam
appaḍiye ĕṉakkā?

akkakko – aḍi
kiṉṉigoḻi
appappo – yĕṉṉa
piṉṉigoḍi
ippappo – muttam
ĕṇṇigŏḍi!
akkak ĕṇṇikko nī

kiḽimañjaro – malai
kaṉimañjaro – kaṉṉak
kuḻimañjaro
yāro yāro
mŏgañjadaro – uṉṉil
nŏḻañjadaro paiya
kŏḻañjadaro yāro yāro

kŏḍi paccaiye o.. ho..
ĕlumiccaiye o.. ho..
uṉmel uṉmel uyir iccaiye

aḍa nūṟu koḍi tasai – ŏvvŏṇḍrilum
undaṉ pere isai!

iṉiccakkīra o.. ho..
aḍiccakkare o.. ho..
maṉasa rĕṇḍā o.. ho..
maḍiccukkire

nāṉ ūra vaitta
kaṉi – ĕṉṉai mĕlla
āṟa vaittu kaḍi!

vervarai nuḻaiyum
vĕyyilum nāṉ – nī
ilaidirai eṉ iṭṭāy?
udaṭṭaiyum udaṭṭaiyum
pūṭṭi kŏṇḍu – ŏru
yugam muḍittu tiṟa aṉbāy!

akkakko – aḍi
kiṉṉigoḻi
appappo – yĕṉṉa
piṉṉigoḍi
ippappo – muttam
ĕṇṇigŏḍi!
akkak ĕṇṇikko nī

kiḽimañjaro – malai
kaṉimañjaro – kaṉṉak
kuḻimañjaro
yāro yāro
āhā… āhā…
āhā… āhā…

mŏgañjadaro – uṉṉil
nŏḻañjadaro paiya
kŏḻañjadaro yāro yāro

suṉaivāsiye o.. ho..
sugavāsiye o.. ho..
tolgaruvi o.. ho..
ĕṉaivāsiye
ĕṉ tolguttā palā – ṟĕkkaigaṭṭi
kālgŏṇḍāḍum nilā

maradegam nāṉ o.. ho..
maraṅgŏtti nī o.. ho..
vaṉadesam nāṉ o.. ho..
adilvāsam nī

nūṟu kirāmtāṉ iḍai – uṉakku iṉi
yāru nāṉ tāṉ uḍai!

aindaḍi vaḽarnda āṭṭusĕḍi – ĕṉṉai
meynduviḍu mŏttam

paccai pasumbul nīyāṉāl
puli pul tiṉṉume ĕṉṉa kuttam?

akkakko – nāṉ kiṉṉigoḻi
appappo – ĕṉṉa
piṉṉigo nī
ippappo – muttam
ĕṇṇikko nī
akkak ĕṇṇikko nī

āhā… āhā…
āhā… āhā…
āhā… āhā…
āhā… āhā…

akkakko – aḍi
kiṉṉigoḻi
appappo – yĕṉṉa
piṉṉigoḍi
ippappo – muttam
ĕṇṇigŏḍi!
akkak ĕṇṇikko nī