என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி...
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
என் உயிர் தோழி கேளொரு சேதி
தன் உயிர் போலே மன்னுயிர் காப்பான்
தலைவன் என்றாயே தோழி
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
அரண்மனை அறிவான் அரியணை அறிவான்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையை காக்க துணை வருவானோ
நன்று தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயர சேதி சொல்வாயோ
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி