Kannirandum minna

கண்ணிரண்டும் மின்ன
Year
Language

கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

கண்ணிரண்டும் மின்ன மின்ன 
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா

கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லைய்யா

நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா

வண்டு வந்து தேனெடுத்து
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டு பாடுதய்யா
தொட்டு தொட்டு பேசுதய்யா

தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதய்யா

பட்ட இடம் அத்தனையும்

பனி போல் குளிருதய்யா

கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

வாழைப் பூ கைகளுக்கு 
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா

இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்

சொன்ன மொழி கேட்டிருப்பேன்

உன்னழகை பார்த்திருப்பேன்

கண் திறந்து காத்திருப்பேன் 

பொன்னுலகம் பார்த்திருப்பேன் 

சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே

ஆஹ ஹஹ ஹஹஹஹா
ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ
ஆஹஹஹ ஹாஹஹஹா ஆஹஹா...

ஓஹொ ஹோஹோ ஓஹொ ஹோஹோ
ஓஹொஹோ...

அஹ ஹாஹா அஹ ஹாஹா 
ஆஹஹா ஹா...

kaṇṇiraṇḍum miṉṉa miṉṉa
kāliraṇḍum piṉṉa piṉṉa
kaṇṇiraṇḍum miṉṉa miṉṉa
kāliraṇḍum piṉṉa piṉṉa
pĕṇṇaḻagu povadĕṅge sŏllammā
ĕṉ pittam tīra marundŏṇḍru sŏllammā

kaṇṇiraṇḍum miṉṉa miṉṉa 
kāliraṇḍum piṉṉa piṉṉa
pĕṇṇaḻagu povadĕṅge sŏllammā
ĕṉ pittam tīra marundŏṇḍru sŏllammā
kaṭṭaḻagu tuḽḽat tuḽḽa
kādal kadai sŏllac cŏlla
pakkam pakkam varuvadĕṉṉa sŏllaiyā
ĕṉ pārvaiyile marundŏṇḍru illaiyā

kaṭṭaḻagu tuḽḽat tuḽḽa
kādal kadai sŏllac cŏlla
pakkam pakkam varuvadĕṉṉa sŏllaiyā
ĕṉ pārvaiyile marundŏṇḍru illaiyyā

nĕy maṇakkum kūndalukku
nīla malar vāṅgi vandeṉ
vāṅgi vanda malargaḽile
vaṇḍu vandu modudammā

vaṇḍu vandu teṉĕḍuttu
uṇḍu viṭṭa podaiyile
vaṭṭamiṭṭu pāḍudayyā
tŏṭṭu tŏṭṭu pesudayyā

tŏṭṭu tŏṭṭu pesaiyile
sŏrkkame toṇḍrudayyā

paṭṭa iḍam attaṉaiyum

paṉi pol kuḽirudayyā

kaṇṇiraṇḍum miṉṉa miṉṉa
kāliraṇḍum piṉṉa piṉṉa
pĕṇṇaḻagu povadĕṅge sŏllammā
ĕṉ pittam tīra marundŏṇḍru sŏllammā

vāḻaip pū kaigaḽukku 
vaḽaiyalgaḽ vāṅgi vandeṉ
vāṅgi vandu sūḍi viṭṭeṉ
tāṅgi kŏḽḽa nāṉ varavā

illai ĕṇḍru sŏṉṉadillai
ĕṉṉavĕṇḍru keṭṭadillai
tŏllai ĕṇḍru ĕṇṇavillai
sŏṉṉa mŏḻi keṭṭiruppeṉ

sŏṉṉa mŏḻi keṭṭiruppeṉ

uṉṉaḻagai pārttiruppeṉ

kaṇ tiṟandu kāttiruppeṉ 

pŏṉṉulagam pārttiruppeṉ 

sŏṉṉa mŏḻi keṭṭiruppeṉ
uṉṉaḻagai pārttiruppeṉ
kaṇ tiṟandu kāttiruppeṉ iravile
pŏṉṉulagam pārttiruppeṉ uṟavile

āha haha hahahahā
oho hoho hohohoho
āhahaha hāhahahā āhahā...

ohŏ hoho ohŏ hoho
ohŏho...

aha hāhā aha hāhā 
āhahā hā...