Kandubidi avanai

கண்டுபிடி அவனை
Work
Year
Language

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்

மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
தடையம் ஏதும் இன்றி என் இதயம் திருடியவள்

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை

யோசனை செய்வதர்க்கும் அந்த பூ முகம் நினைவில்லை
வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை

திருடி சென்றதை திருப்பி தந்தால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடி சென்றவள் திரும்பி வந்தால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

நீ என்னை தழுவிகொண்டாள் என் நெற்றிக்கும் இனிக்கும் அடி
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே தங்கம் தண்ணீரில் விளையும் அடி
மாறாப்பை சரியாவிட்டு உந்தன் மார்போடு படரும் கோடி
பேரின்ப கவி எழுத கம்பன் பிறக்காட்டும் பழய படி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீள இரவை நீள செய்து பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

kaṇḍubiḍi avaṉai kaṇḍubiḍi nĕñjai kaḽavāḍi oḍi viṭṭāṉ kaṇḍubiḍi
kaṇḍubiḍi avaṉai kaṇḍubiḍi nĕñjai kaḽavāḍi oḍi viṭṭāṉ kaṇḍubiḍi

kaṇgaḽ mayaṅga vaittu iḽam kaṉṉam varuḍiyavaṉ
viṇ mīṉ viḻittirukka avaṉ nilavai tiruḍiyavaṉ

maṇakkum kūndaliṉāl ĕṉ mārbai varuḍiyavaḽ
taḍaiyam edum iṇḍri ĕṉ idayam tiruḍiyavaḽ

mugam kŏñjam niṉaivirukku avaṉ mugavari tĕriyavillai
mudal mudal tiruḍiyadāl ĕṉṉai muḻusāy tiruḍavillai

yosaṉai sĕyvadarkkum anda pū mugam niṉaivillai
vāsalil maṟaindu viṭṭāḽ avaḽ vāsaṉai maṟaiyavillai

tiruḍi sĕṇḍradai tiruppi tandāl
anda idayattai avaṉukke parisaḽippeṉ
tiruḍi sĕṇḍravaḽ tirumbi vandāl
miccam iruppadai mīṇḍum tiruḍa sŏlveṉ
uṟave uṟave varuga uyirāl uyirai tŏḍuga

kaṇḍubiḍi avaṉai kaṇḍubiḍi nĕñjai kaḽavāḍi oḍi viṭṭāṉ kaṇḍubiḍi
kaṇḍubiḍi avaṉai kaṇḍubiḍi nĕñjai kaḽavāḍi oḍi viṭṭāṉ kaṇḍubiḍi

nī ĕṉṉai taḻuvigŏṇḍāḽ ĕṉ nĕṭrikkum iṉikkum aḍi
pĕṇṇe uṉ sparisattile taṅgam taṇṇīril viḽaiyum aḍi
māṟāppai sariyāviṭṭu undaṉ mārboḍu paḍarum koḍi
periṉba kavi ĕḻuda kambaṉ piṟakkāṭṭum paḻaya paḍi
neram tūram maṟandu viṭṭu
ŏru nimiṣattai yugamāy nām vaḽarppom
nīḽa iravai nīḽa sĕydu pŏṉ nilavu teyvadai niṟutti vaippom
uṟave uṟave varuga uyirāl uyirai tŏḍuga

kaṇḍubiḍi avaṉai kaṇḍubiḍi nĕñjai kaḽavāḍi oḍi viṭṭāṉ kaṇḍubiḍi
kaṇḍubiḍi avaṉai kaṇḍubiḍi nĕñjai kaḽavāḍi oḍi viṭṭāṉ kaṇḍubiḍi