ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்
காதல் பாதி தேடோடிப்போறேன்
கனவெல்லாம் விரலோடு
உலகெல்லாம் அழகோடு
இனியெல்லாம் அவனோடு
பூவாகும் தாரோடு
காற்றாகும் காரோடு
மாற்றங்கள் வேரோடு
ஹோ ஹஹோ
என் கூடு மாறப்போறேன்
ஹோ ஹஹோ
என் வானம் மாத்தப்போறேன்
ஏய்
என் புதுச் சிறகே
நீ ஏன் முளைத்தாய்
கேட்காமல் என்னை
ஏய்
என் மனச் சிறையே
நீ ஏன் திறந்தாய்
கேட்காமல் என்னை
ஒற்றைப் பின்னல் அவனுக்காக
நெற்றிப் பொட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே
இதழின் ஈரம் அவனுக்காக
மனதின் பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே
ஹோ ஹஹோ
என் கூடு மாறப்போறேன்
ஹோ ஹஹோ
என் வானம் மாத்தப்போறேன்
ஏன்?
நீ சிரிப்பது ஏன்?
நீ நடிப்பது ஏன்?
கேட்காதே என்னை
ஏன்?
நீ குதிப்பது ஏன்?
நீ மிதப்பது ஏன்?
கேட்காதே என்னை
தானே பேசி நடக்கும்போதும்
காற்றில் முத்தம் கொடுக்கும்போதும்
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே...
கண்முன் சென்று நிற்கும்போதும்
கட்டிக்கொண்டு கத்தும்போதும்
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே...
ஹோ ஹஹோ
என் கூடு மாறப்போறேன்
ஹோ ஹஹோ
என் வானம் மாத்தப்போறேன்