முருகா... முருகா... முருகா...
முருகனின் அருளென்ற
முதலான பொருள் கண்டு
உருகினேன் அன்பு முருகா
முருகனின் அருளென்ற
முதலான பொருள் கண்டு
உருகினேன் அன்பு முருகா
முத்தமிழ் செப்பிடும் தத்துவச் சக்தியை
பருகினேன் வண்ண முருகா
முத்தமிழ் செப்பிடும் தத்துவச் சக்தியை
பருகினேன் வண்ண முருகா
கல்லாத பேதையரும் கற்றவரும் ஒன்றாகி
கை தொழுது பாடும் முருகா
கல்லாத பேதையரும் கற்றவரும் ஒன்றாகி
கை தொழுது பாடும் முருகா
கல்லாக நின்றாலும் கனியாகக் கனிகின்ற
கருணை வடிவான முருகா
கல்லாக நின்றாலும் கனியாகக் கனிகின்ற
கருணை வடிவான முருகா
கருணை வடிவான முருகா
கருணை வடிவான முருகா
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு பட சூரனை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
அன்பர்களுக்கின்ப நிலை கோடி தர வேண்டும்
உன் அன்பர்களுக்கின்ப நிலை
கோடி தர வேண்டும்
அத்தனே... முத்தனே...
அத்தனே முத்தனே தத்துவ சித்தனே
பக்தருக்கருள் புரியும் பழநி மலை கந்தனே
பக்தருக்கருள் புரியும் பழநி மலை கந்தனே...