Kadavul tanda alagiya

கடவுள் தந்த அழகிய
Work
Year
Language

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்கையை
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்

kaḍavuḽ tanda aḻagiya vāḻvu
ulagam muḻudum avaṉadu vīḍu
kaṇgaḽ mūḍiye vāḻttu pāḍu

karuṇai pŏṅgum uḽḽaṅgaḽ uṇḍu
kaṇṇīr tuḍaikkum kaigaḽum uṇḍu
iṉṉum vāḻaṉum nūṟu āṇḍu
ĕdai nām iṅgu kŏṇḍu vandom
ĕdai nām aṅgu kŏṇḍu sĕlvom

aḻage pūmiyiṉ vāḻgaiyai
aṉbil vāḻndu viḍaip pĕṟuvom

kaḍavuḽ tanda aḻagiya vāḻvu
ulagam muḻudum avaṉadu vīḍu
kaṇgaḽ mūḍiye vāḻttu pāḍu

pūmiyil pūmiyil iṉbaṅgaḽ ĕṇḍrum kuṟaiyādu
vāḻkkaiyil vāḻkkaiyil ĕṉakkŏṇḍrum kuṟaigaḽ kiḍaiyādu
ĕdu varai vāḻkkai aḻaikkiṟado.. ŏ..

ĕdu varai vāḻkkai aḻaikkiṟado
adu varai nāmum sĕṇḍriḍuvom
viḍaibĕṟum neram varum podum
sirippiṉil naṇḍri sŏlliviḍuvom