ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள் ஆ…
பேசிடலாம் கலாபக்காதலா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்து தான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில்… எனது கனவினை…
காண போகிறேன்…
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
சந்தியாக் கால மேகங்கள்
உன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே… வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே…
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள் ஆ…
பேசிடலாம் கலாபக்காதலா
கலாபக்காதலா