ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்
ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்
இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்
(ஆயிரத்தில் நான் ஒருவன்)
அரசனாகட்டுமே அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்
நெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன்
உண்மைக்கு காவல் இருப்பேன்
இந்த உலகம் கதவடைத்தால் எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துனிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்
(ஆயிரத்தில் நான் ஒருவன்)
புரட்சி மலரட்டுமே புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே
வாழ்க்கை விடியட்டுமே வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம் உண்மைகள் தெளியட்டுமே
இனி எழுஞாயிறு எழுக
அந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக
(ஆயிரத்தில் நான் ஒருவன்)