Irubadu kodi nilavugal koodi

இருபது கோடி நிலவுகள் கூடி
Year
Language

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..
(இருபது..)

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
(நூறு கோடி..)
(இருபது..)

ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
(நூறு கோடி..)
(இருபது..)

irubadu koḍi nilavugaḽ kūḍi pĕṇmaiyāṉado
ĕṉ ĕdire vandu puṉṉagai sĕyya kaṇ kūsudo

irubadu koḍi nilavugaḽ kūḍi pĕṇmaiyāṉado
ĕṉ ĕdire vandu puṉṉagai sĕyya kaṇ kūsudo
kuḻaigiṇḍra taṅgaṅgaḽ kaṉṉaṅgaḽ āgādo
nĕḻigiṇḍra vil rĕṇḍu puruvaṅgaḽ āgādo

nūṟu koḍi pĕṇgaḽ uṇḍu uṉ pol yārum illaiye
āṉāl kaṉṉi undaṉ kaṇgaḽ kaṇgaḽ maṭṭum kāṇavillaiye
oho.. oho.. oho.. oho..
(irubadu..)

taṅgamāṉa kūndal tāḻndu vandadĕṉṉa
vandu undaṉ pādam kaṇḍu vaṇakkam sŏllavo
teṉ midakkum udaḍu serndiruppadĕṉṉa
ŏṇḍrai ŏṇḍru muttamiṭṭu iṉbam kŏḽḽavo
māṉiḍap piṟavi ĕṉṉaḍi madippu
uṉ kāl viral nagamāy iruppadu siṟappu
(nūṟu koḍi..)
(irubadu..)

jūlai mādam pūkkum kŏṇḍraip pūkkaḽ pola
selai kŏṇḍa pĕṇṇiṉ aṅgam toṭram kāṭṭude
tājmagāliṉ vaṇṇam māṟakkūḍum pĕṇṇe
meṉi kŏṇḍa kaṉṉam miṉṉum vaṇṇam kūḍude
niṟamuḽḽa malargaḽ solaikku pĕrumai
nī uḽḽa ūril vasippadu pĕrumai
(nūṟu koḍi..)
(irubadu..)