Iru viliyo

இரு விழியோ
Year
Language

இரு விழியோ சிறகடிக்கும்
இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே..
மணல்வெளிப் போல கிடக்கிற ஆசை
மழை துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்
விசத்தறிப் போல அடிக்கிற நாளை
நானும் இந்தத் தேதி அடி காதல் தின்ற மீதி
தோழி நீயும் வாடி இருத் தோளும் தானே தூளி
இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே..

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்
மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்
புயலாய் ஆனாயே
சங்கில் ஓசைப் போலே உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்னல் போல கண்ணில் உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை
உயிரோடு உயிர் பேச அடிக் காதல் தானே பாஷை
இது வரமா…
மரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்
கரங்களைத் தீண்டி உறங்கிடும் மாயம்
வெறும் சுகமா…
சுகங்களைத் தேடும் இடங்களின் ஓரம்
படங்களைப் போடும் நகங்களில் சாயம்
இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே..

கதை பேசிக் கொள்ள இதழ் தீயை தூண்டு
அலை பேசிப் போலே காதோரம் சீண்டு
உடும்பாய் ஆவேனே
இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே
உறங்கும் எனது கனவு அதில் உனது பெயரில் கனவு
மயங்கும் எனது இரவு உந்தன் மனது பார்க்கும் உளவு
இதைக் காண வருமோடி ஒரு கோடி வான நிலவு
இது குளிரா
குளிர்கிற நேரம் குழைகிற தேகம்
இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம்
இளங்கதிரா
இளங்கதிர் வந்து உரசிடும் காலம்
இவர்களின் இரவு உறங்கிடும் நேரம்
இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதல் நாள் தானே..
மணல்வெளிப் போல கிடக்கிற ஆசை
மழை துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்
விசத்தறிப் போல அடிக்கிற நாளை

iru viḻiyo siṟagaḍikkum
iru viḻiyo siṟagaḍikkum
imaigaḽilo vĕḍivĕḍikkum
idayattile ŏru kaṉavu
udayattile vaḍam piḍikkum
kādal nāḽ tāṉe..
maṇalvĕḽip pola kiḍakkiṟa āsai
maḻai tuḽip pola kudikkiṟa nāḽai
viḽakkŏḽip pola tuḍikkiṟa nĕñjam
visattaṟip pola aḍikkiṟa nāḽai
nāṉum indat tedi aḍi kādal tiṇḍra mīdi
toḻi nīyum vāḍi irut toḽum tāṉe tūḽi
iru viḻiyo siṟagaḍikkum
imaigaḽilo vĕḍivĕḍikkum
idayattile ŏru kaṉavu
udayattile vaḍam piḍikkum
kādal nāḽ tāṉe..

ŏru pāṟai mĕlla mĕḻugāṉadĕṉṉa
uṉai kaṇḍa velai uyir pūttadĕṉṉa
maḻaiyāy viḻundāy
mūkkuttip pole āḍāda nĕñjam
nī pārtta tāle toḍāccu nĕñjam
puyalāy āṉāye
saṅgil osaip pole uṉṉil taṅgik kŏḽḽa āsai
miṉṉal pola kaṇṇil undaṉ pimbam pūkkum āsai
uyiroḍu uyir pesa aḍik kādal tāṉe pāṣai
idu varamā…
maraṅgaḽil eṅgi kiraṅgiḍum tegam
karaṅgaḽait tīṇḍi uṟaṅgiḍum māyam
vĕṟum sugamā…
sugaṅgaḽait teḍum iḍaṅgaḽiṉ oram
paḍaṅgaḽaip poḍum nagaṅgaḽil sāyam
iru viḻiyo siṟagaḍikkum
imaigaḽilo vĕḍivĕḍikkum
idayattile ŏru kaṉavu
udayattile vaḍam piḍikkum
kādal nāḽ tāṉe..

kadai pesik kŏḽḽa idaḻ tīyai tūṇḍu
alai pesip pole kādoram sīṇḍu
uḍumbāy āveṉe
ivaḽ kŏṇḍa meṉi malaiyāḽac colai
idaḻāle tŏṭṭāl marudāṇic cālai
sivande poṉeṉe
uṟaṅgum ĕṉadu kaṉavu adil uṉadu pĕyaril kaṉavu
mayaṅgum ĕṉadu iravu undaṉ maṉadu pārkkum uḽavu
idaik kāṇa varumoḍi ŏru koḍi vāṉa nilavu
idu kuḽirā
kuḽirgiṟa neram kuḻaigiṟa tegam
iruvariṉ nĕñjil samuttirat tāgam
iḽaṅgadirā
iḽaṅgadir vandu urasiḍum kālam
ivargaḽiṉ iravu uṟaṅgiḍum neram
iru viḻiyo siṟagaḍikkum
imaigaḽilo vĕḍivĕḍikkum
idayattile ŏru kaṉavu
udayattile vaḍam piḍikkum
kādal nāḽ tāṉe..
maṇalvĕḽip pola kiḍakkiṟa āsai
maḻai tuḽip pola kudikkiṟa nāḽai
viḽakkŏḽip pola tuḍikkiṟa nĕñjam
visattaṟip pola aḍikkiṟa nāḽai