அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே
தாய் வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
தாய் வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதை பார்த்திருக்க நேரம் இல்லை மகளே
நான் அதை பார்த்திருக்க நேரம் இல்லை மகளே
நேரம் இல்லை மகளே
கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே
தாய் குலத்தின் மேன்மை எல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் கலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வர வேண்டும்
அதை கண் குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண் குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே
உள்ளம் இல்லை மகளே