மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ஆணிப் பொன் மேனியை ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும் நேற்றல்லவோ
பனி மலர் அழகினில் மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா...
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்
அவனும் அவளும் சிலையாய் இருந்தால் கோயில்
இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்
காதலன் பேசிட மாதுளம் பூவினில்
தேன் துளி கொடுத்ததும் நீயல்லவோ
உனக்குள்ள மயக்கத்தில் எனக்குள்ள பாக்கியை
தந்தால் இன்றே தா...
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
மலர்ந்தாள் கனிந்தாள் மடிமேல் விழுந்தாள் பாவை
மெதுவாய் தொடவும்
கொடி போல் வளைந்தாள் தோகை
யாரும் இல்லாதொரு நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும் நானல்லவோ
நாளென்ன பொழுதென்ன ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்...
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
லாலால லலலால லாலால லலலால
லால்லால்ல லலலால்லா
லால்லால்ல லலலால்லா