வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
***
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே (இசை)
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன் (இசை)
ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
(இசை) சரணம் - 2
கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்
அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே (இசை)
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது (இசை)
அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே