பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலைப் பொழுதில் இளம் தென்றல்
தொடாத மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
உள்ளத்தை ஆட விட்டேன்