வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
(வத்திக்குச்சி…)
மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏத்தம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா
(வத்திக்குச்சி…)
முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனசை இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு ஓரம் ஆளமடா
(வத்திக்குச்சி…)