ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
—
ஒன்னுக்கொன்னு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதம் இல்லே
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னும் பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லே
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லே
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும்
ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள்
போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும்
ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள்
போவதென்ன
இதை புரிஞ்சும்
உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா
—
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
—
சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா
சொத்து சுகம் தேவை இல்லே
பந்தம் விட்டு போச்சுதுன்னா
வாழ்வதிலே லாபம் இல்லே
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா
இன்றும் என்றும் சோகமில்லே
கன்றை விட்டு தாய் பிரிஞ்சு
காணும் சுகம் ஏதுமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும்
இஷ்ட்டபட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
என்றென்றும் அர்த்தமில்லே
ஊருக்கும் பேருக்கும் காருக்கும்
இஷ்ட்டபட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு
என்றென்றும் அர்த்தமில்லே
இதை புரிஞ்சும்
உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா
—
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேசம்
ஆண் என்ன பெண் என்ன
நீ என்ன நான் என்ன
எல்லாம் ஓர் இனம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்