மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
நீ இருந்த கண்ணுக்குள்ள
நான் இருந்தேன் கனவுக்குள்ள
காதலெனும் நெருப்புக்குள்ள
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
பூ தாங்கும் காம்பப்போல
நான் உன்ன நெஞ்சில் வெச்சு
காத்து மழை வெய்யில் பட்டு தவிச்சேன்
காத்தில் வந்த வாசத்த
கால் கொலுசு தாளத்த
நானும் தானே கேட்டு கேட்டு உள்ளம் துடிச்சேன்
என்னோட ஆசைகள உன்னோட போக விட்டு
தன்னந்தனியாக நின்னு அழுதேன்
வெண்ணிலவா உன்ன நான் வாழ வெய்க்க எண்ணித்தான்
மேகம் போல உன்னை விட்டு பிரிஞ்சிருந்தேன்
உடல் உருகியதே
உயிர் மருகியதே
என் கூந்தல் பூக்கள்
சூடாம உதிர்கிறதே
பூமி எங்கும் பூக்கள் எதற்காக
மாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக
பூமி எங்கும் பூக்கள் எதற்காக
மாலை ஒன்ன கோர்க்கும் நமக்காக
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
என் கண்ணு மின்ன மின்ன
கால் ரெண்டும் பின்ன பின்ன
மூச்சுக்குள்ள நாதஸ்வரம் கேட்டேன்
நெத்திச்சுட்டி புல்லாக்கு
முத்து மால லோலாக்கு
பொட்டு வச்சி நானும் உன்னை கொஞ்சி ரசிச்சேன்
சொல்லாமல் செத்துவிட
தோணியதா முத்தமிட
ஒட்டிவெச்ச உசுருக்குள் கெடந்தேன்
நெஞ்சு குழி விக்கிச்சு
நெத்தியெல்லாம் வேர்த்துச்சு
உன்னொடய மூச்சிலதான் நானும் இருந்தேன்
இமை துடிக்கிறதே
விழி சிலிர்க்கிறதே
நீ வந்த நேரம் என் கண்ணீர் சிரிக்கிறதே
காலம் யாவும் இருப்பேன் உனக்காக
காதல் நமக்கு இருக்கும் துணையாக
காலம் யாவும் இருப்பேன் உனக்காக
காதல் நமக்கு இருக்கும் துணையாக
மலை போல உன்னை சுமந்தேனே
மனசுக்குள்ள நான் பறந்தேனே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
சுமந்திடவும் முடியலயே
எறக்கிவைக்க தெரியலையே
நீ இருந்த கண்ணுக்குள்ள
நான் இருந்தேன் கனவுக்குள்ள
காதலெனும் நெருப்புக்குள்ள