அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே ஹோ
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே
இருவிழி கலங்கிடும் நேரம்
இந்த இதயத்தில் கன்மையின் பாரம்
ஒருமுறை உன்முகம் காண
இவள் உயிருடன் இருந்திட வேண்டும்
அன்புக்குள் ஆடும் மயில் அமைதியை தேடுதே
அன்னம் அவள் உந்தன் முகம் விழிகளில் ஆடுதே
வானம்தனில் மேகங்களும் இருள்தனை கூட்டுதே
வாழ்கை எனும் கேள்விக்கணை பயந்தவள் ஆக்குதே
என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா
அனல் தனில் வாடிடும் பூவை பூவை
அணைத்திடவே வந்த காற்றே காற்றே
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே
உறவையும் ஊரையும் மறந்து
இங்கு ஒருவழி கண்டிட நடந்தோம் ஹோ
தெய்வமும் துணை வரும் என்று
அன்பு தீபத்தின் ஒளியினை தொடர்ந்தோம் ஹோ
மக்கள் நிலை துன்பம் எனில் மன்னவன் வாடுவான்
அவன் வாழ்வில் ஒரு இன்பம் வர வழிதனை தேடுவான்
திக்கற்றவர் தும்பம்தனை தெய்வமும் ஏற்குமா
அந்த தெய்வம் எந்தன் எதிரினில வந்து இருவரை சேர்க்குமா
என் கீதம் உன்னை இங்கேதான் கொண்டு வாராதோ இறைவா
அனல் தனில் வாடிடும் பூவை பூவை
அணைத்திடவே வந்த காற்றே காற்றே
உன் நெஞ்சை கொஞ்சம் நீ கொடு
என் நெஞ்சை அங்கே சேர்த்திடு
அனல் தனில் வாடிடும் பூவை பூவை ஹோ
அணைத்திடவே வந்த காற்றே காற்றே