அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்
தனிமைகள் இன்று இரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்
விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்
மெல்ல மெலிகிறேன்
கொஞ்சம் உறைகிறேன்
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்
பனைமரம் வசிப்பதை போலை ஏனோ இன்று
புதுவித கலக்கங்கள் கூடும் வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன்
நகர்ப்புறங்களில் திரிகிறேன்
இமை விசிரியில் பறக்கிறேன்
எதை ஏதையோ வியக்கிறேன்
காதல் வந்த பின்னால் தனி பெரும் பதட்டம்
தோளில் சாய்ந்து கொண்டு
மெல்ல நினைப்பதை மறந்திடலாம்
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்
தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல
உன் புகைப்படம் கொடுக்கின்ற மணம் பிடிக்க
உன் அருகினில் வசித்திட மணம் துடிக்க
காதல் எல்லாம் அட காதல் கொள்ள
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள
ஏதோ சொல்லி எனை கிண்டல் செய்வாய்
யாரும் இன்றி அதை எனக்குள்ளே இரசிப்பேன்