அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
கட்டிய ஆடை களவாடும்
கண்ணன் இங்கில்லை
கட்டிய ஆடை களவாடும்
கண்ணன் இங்கில்லை
தன்னை காதலிக்க வேண்டுமென்ற
மன்னன் இங்கில்லை
லல்லல் லால லல்லல் லால
லல்லல் லால லல்லல் லா
மெல்லிடை மீது துள்ளித் துள்ளி
மீன்கள் விளையாடும்
மெல்லிடை மீது துள்ளித் துள்ளி
மீன்கள் விளையாடும்
அந்த மீன் தொட்டாலே ஆண்
தொட்டது போல் இன்பம் உண்டாகும்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
லலல் லல்லல்ல லலல் லல்லல்ல
லலல் லல்லல்ல லல்லல் லா
லலல் லல்லல்ல லலல் லல்லல்ல
லலல் லல்லல்ல லலல் லா
வெண்ணிற ஆடை சுமந்தாடும்
கடலும் கன்னியடி
வெண்ணிற ஆடை சுமந்தாடும்
கடலும் கன்னியடி
அவள் ஆசை நெஞ்சின் ஆழமென்ன
கண்டவரில்லையடி
லல்லல் லால லல்லல் லால
லல்லல் லால லல்லல் லா
செந்நிற வானும் தொட்டுத் தொட்டு
சொந்தம் கொண்டாடும்
செந்நிற வானும் தொட்டுத் தொட்டு
சொந்தம் கொண்டாடும்
அந்தி மாலை தோறும் நாளும்
இந்த நாடகம் அரங்கேறும்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
லல்லல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா
லல்லல் லல்லல் லா லாலா லாலா லா...