அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக் கண்டாள் (இசை)
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக் கண்டாள்
கதை எழுதி பழகி விட்டாள்
முடிக்க மட்டும் தெரியவில்லை
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று
கூறிப் பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை
விதிப் புகுந்தே திருத்துதம்மா
அவள் எழுதும் கவிதைகளை
விதிப் புகுந்தே திருத்துதம்மா
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று
வெள்ளை உள்ள பிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ பழங்கதையோ
விடுகதையோ எது இன்று
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ