ஓ வந்தது பெண்ணா வானவில்தானா
பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா
காதலியே என் மனதை பறித்தது நீதானா
உன் பேரே காதல் தானா
தில்லானா பாட வந்த மானா
(உன் பேரே..)
(ஓ வந்தது..)
வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு
வாசனைகள் பூசுதடி வண்ண கனவு
கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது எந்தன் மனது
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நான் இல்லையே
எல்லாமே நீ தானே
(உன் பேரே..)
(ஓ வந்தது..)
என் ஆசை உனக்குள்ளே இருக்காதா
விட்டுவிட்டு இருதயம் துடிக்காதா
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காற்றை என் மூச்சு சேராதா
என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காதா
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா
(உன் பேரே..)
(ஓ வந்தது..)