பொடி வச்சி புடிப்பான்
வெடி போல வெடிப்பான்
ஜெயிக்க பொறந்தானாடா ஓஹோ……
ஏய் இவன் கலக்க துடிப்பான்
ஓஹோ… வந்த கணக்க முடிப்பான்
தேடி வந்தவ கேட்டுத்தான்
தேகம் கொடுப்பா வேலி தேடித்தான்
ஆயுள் இருந்தா அட போதுமடா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது
வா கூப்பிடு தல
கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்ல
தந்தனானே தானேனன்னே……
சேவலுக்கு தான் இவ சேதி சொல்லுவா
சேதம் கொடுக்க இவ யோசிசுடுவா
ஊரு முழுக்க இவன் பெற சொல்லிட்டா
ஊத்து தண்ணியும் ஒரு நிமிஷம் நிக்கும்டா
ஓர கண்ணத்தான் இவ தாக்கிபுட்டாலே
ரோசா புயலும் ஒதுங்கி போகுமடா
நியாயம் இருந்தா அட போதும்டா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது
வா கூப்பிடு தல கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்ல
தந்தானானே தானேன்னே ……
கண்டபடிதான் இவன் சிந்திக்க மாட்டான்
ஏய் கன்னிகழிடா இவன் சிக்கிக்க மாட்டான்
ஏய் வாலபுடிக்கும் ஆளு இல்லடா
வாக்கு வாதத்தில் போதிமரம்டா
மீறி நடந்தா ஏறி மிதிப்பான்
சீறும் ரகத்தில் இவன் சிறுத்த குட்டிடா
மேலே விழுந்தா அது போதும்டா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது
வா கூப்பிடு தல
கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்லே
தந்தனானே தானேனன்னே……