குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்
தனக்கொரு ஜாகிங் யார் என்று
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்
எனக்கொரு ஜாகிங் நீ என்று
குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு
குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..
குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..
எங்கெங்கு என்னென்ன தேவை
எங்கெங்கு என்னென்ன சேவை
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பாய்
நெஞ்சோடு பாய்கின்ற வேளை
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா
விதவிதமா புதியகலை.. விடியும்வரை சரசமழை..
ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவையில்லை
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு
அழகிய பெண்கள் எமனின் கண்கள்
மூடிய விழிகள் விசங்களின் குளங்கள்
மார்பின் பழங்கள் மரணப்பழங்கள்
பறக்கும் கூந்தல் பாசக்கயிறு
அறிவேன் பெண்ணே... அகப்பட மாட்டேன்...
அகழியில் விழுந்தால்... சுகப்பட மாட்டேன்...
மேல்நாடு பாராத கண்ணும்
கீழ் நாடு பாராத ஆணும்
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை
ஓஹோ ஓஹோ ஓ...
மோகங்கள் தீர்க்காத ஆணும்
தாகங்கள் தீர்க்காத நீரும்
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை
இவருக்குள்ளே இறந்துவிடு
இதயத்திலே புதையல் எடு
ஒவ்வொரு தினமும் குளித்துவிடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை...
குறிவைத்து அடக்கும்...
புஜவலி உனக்கு...
நிஜவலி எனக்கு...
அழகாய் கொழுத்து...
அந்தரத்தில் பழுத்து...
கொடிவைத்த கனிகள்...
வழிவிட்டு கெடக்கு...