சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நிசந்தானே
காத்தாக நான் ஆனாலும் உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் போனாலும் உனக்காக காத்திருப்பேன்
எனக்கென்ன ஆச்சு உனக்கென்ன ஆச்சு
காதல் நமக்குள் வந்தாச்சோ
சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நிசந்தானே
ஆலமரத்தில் ஊஞ்சல் போட்டு ஆடும்போது காத்தா வந்து
ஈர இடுப்ப கில்லி தீ மூட்டிடுவ
பாசி பூத்த குளத்தில் நானும் பாதி கழுத்து முங்கி குளிக்க
முதுகு பக்கம் வந்து தீ மூட்டிடுவ
அந்தி சாயும் தன்னால ஆட்டு மந்த பின்னால
மஞ்ச காட்டில் நானிருக்க நெஞ்சு கூட்டில் நீ நெருக்க
குலசாமி சிலை கூட உன் போல் சிரிக்கிறதே
ஆசை கோடி என் மனசில் உன்னை சேரும் நாளும் என் கனவில்
கோயில் வாசல் கோலம் என்னை வீட்டு கோலம் ஆக்குன
ஊருக்கான தீபம் என்னை நெஞ்சுக்குள்ள ஏத்துன
உன் நெனைப்பு இந்த உசுரில் இனி ஒருநாளும் போகாது
நீ கெடைச்சா அது போதும் வேற வரம் இங்கு எது