சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ அலங்காரி நீ…
ஓ சுகுமார்….ஓ சுகுமாரி ஓ சிங்காரி
ஏ குமாரி … ஏ குமாரி நீ… குமாரி..
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ
இந்த காதல் என்ன வெரும் பாரமா
இது பேறு காலம் இல்லா கற்ப்பமா
ஓ.. காதலை மறைத்தால் கனம் தாங்காமல்
என்னுயிர் செத்துபோகும் இல்லையா
காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்
காதலே செத்து போகும் இல்லையா
ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை
முழுசா சொல்வது இல்லை
நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை
குமாரி…… ஆ….ஆ…ஆ
நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலை தேடி நடக்கின்றேன்
கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்?
கண்களை பார்த்து காதலை சொல்ல
தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்
குமாரி… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது
குமாரி… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது
குமாரி… என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
குமாரா… என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா
குமாரா… என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா
குமாரா… என் வார்த்தை கடல் வற்றி விட்டதா
நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடி தடி
சஞ்சானே தோனே தானி நேனானோ
அல தும்பக்க தானே அம்பி லம்பானோ