Aṉbil avaṉ

அன்பில் அவன்
Year
Language

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே

aṉbil avaṉ sertta idai
maṉidare vĕṟukkādīrgaḽ
veṇḍum ĕṉa iṇainda idai
vīṇāga midikkādīrgaḽ

uyire uṉṉai uṉṉai ĕndaṉ
vāḻkkai tuṇaiyāga
eṟkiṇḍreṉ eṟkiṇḍreṉ
iṉimel puyal vĕyil maḻai
pālai solai ivai
ŏṇḍrāga kaḍappome

uṉṉai tāṇḍi ĕdaiyum
ĕṉṉāl yosaṉai sĕyya
muḍiyāde muḍiyāde

nī vāṉavillāga
avaḽ vaṇṇam eḻāga
anda vāṉam vīḍāga
māṟādo māṟādo
ŏru joḍi poṭṭuttāṉ
nīṅgaḽ poṉāle
kaṇ paṭṭuk kāyscaldāṉ
vārādo vārādo

nīḽum iravil ŏru pagalum
nīṇḍa pagalil siṟu iravum
kaṇḍu kŏḽḽum kalai aṟindom
ĕṇḍru ĕṅgu adai payiṇḍrom

pūm vāṉam kāṭru
tīyai nīrāy māṭru
pudidāy kŏṇḍu vandu nīṭṭu

kādal ĕllām nuḻaiyum iḍam
kalyāṇam tāṉe
iṇḍru tŏḍaṅgum inda kādal
muḍivillā vāṉe