அம்மா தானே நமக்கு அன்பு மழை
அவளை ஆண்டவன் என்றால் என்ன பிழை
சிறு நாழிகை தூங்கவில்லை உனை பார்க்கத்தானடா
பெருமூச்சிலே சோறாக்கினாள் உனக்காகத்தானடா
கடல் வாங்கி அழுதாள் இவள் தான்
சிறு குருவிக்கும் தாய் இன்றி கூடா
ஒரு தாய் இன்றி வாழ்வேது போடா
அட இவள் சோற்றிலே நீ பசியாறினாய்
இவள் தூக்கத்தை நீ தூங்கினாய்
பந்த பாசங்கள் எல்லாமே சும்மா
அட திண்ணைக்கு போனாளே அம்மா
இந்த தண்ணீரையும் பெற்ற தாயன்பையும்
நீ அறுத்திட்டு எங்கே செல்வாய்
கிளை ஊர் தாண்டட்டும் லட்சம் பூ பூக்கட்டும்
உன் வேர் இந்த தாயல்லவா...
கடல் வாங்கி அழுதாள் இவள் தான்