அமராவதியே... என் ஆசை கனியமுதே...
கமழும் தமிழ் மணமே....
கட்டழகே... நித்திலமே... ஏ...
இமையாது எனை நோக்கி
என் உயிரை கொள்ளை கொண்டு
அமையாத மின் போல் அகன்றாயே
ஆற்றுவேனோ ஆற்றுவேனோ...
அந்தமேவும் அரவிந்த மா மலரில்
வந்த வேதவல்லியா
அந்தமேவும் அரவிந்த மா மலரில்
வந்த வேதவல்லியா
கடல் தந்த பொன்னின் செல்வியா
கடல் தந்த பொன்னின் செல்வியா
மதன் சிந்தை வாழும் வெல்லியா
என்று கண்ட போதில் ஐயம் கொண்டு பேசும்
எழில் நின்றுலாவும் கிள்ளையாள்
என்று கண்ட போதில் ஐயம் கொண்டு பேசும்
எழில் நின்றுலாவும் கிள்ளையாள்
துங்க மேவும் இள நங்கையாளின் எழில்
அங்கம் யாவும் தங்கமே
துங்க மேவும் இள நங்கையாளின் எழில்
அங்கம் யாவும் தங்கமே
முகம் பொங்கும் சந்திர பிம்பமே
முகம் பொங்கும் சந்திர பிம்பமே
சற்றும் அங்கில்லை களங்கமே
பிறை துண்டு போல
நெற்றி சங்கு போல் கழுத்தும்
சொல்லொண்ணாத இன்பமே
பிறை துண்டு போல
நெற்றி சங்கு போல் கழுத்தும்
சொல்லொண்ணாத இன்பமே
கொண்டல் நாணும் குழல் செண்டை நாடும் குழல்
வண்டு நாணும் விழியாள்...
ஆ... ஆ... ஏ... ஆ... ஆ... ஆ...
கொண்டல் நாணும் குழல் செண்டை நாடும் குழல்
வண்டு நாணும் விழியாள்
கற்கண்டு நாணும் மொழியாள்
கற்கண்டு நாணும் மொழியாள்
பள்ளை தண்டு நாணும் செவியாள்
மின்னல் கண்டு நாணும் இடை
கொண்டு தேனும் சுவை
குந்தி நாணும் இதழாள்
அந்தமேவும் அரவிந்த மா மலரில்
வந்த வேதவல்லியா
கடல் தந்த பொன்னின் செல்வியா
என்று கண்ட போதில் ஐயம் கொண்டு பேசும்
எழில் நின்றுலாவும் கிள்ளையாள்