சொந்த குரலில் பாட
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி
ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
(சொந்த..)
காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
(சொந்த..)
இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
(சொந்த..)