சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணும்…
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்…
குடிக்கிற தண்ணீர் காசே கொசுவைவிரட்ட காசே
அர்ச்சனை சீட்டும் காசே திருப்பணி சீட்டும் காசே
ஆட்டோ மீட்டர் காசே திருட்டு வீடியோ காசே
போலி சாமியார் காசே அட பொணத்தில் நெத்தியிலும் காசே
காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து மறைவா வித்தா காசே
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்
தொட்டதுக்கெல்லாம் காசே
காசே காசே காசே… (சென்னை)
பூமி வட்டமா ஏகாசு வட்டமா
நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே
கடற்கரை காதல் காசே கவர்மெண்ட் மாப்பிளே காசே
நீலப்படமும் காசே அட சிவப்பு விளக்கும் காசே
எல்கேஜி-யும் காசே எம்.பி.பி.எஸ். காசே
இட்லிய வித்தாலும் காசே உன் கிட்னிய வித்தாலும் காசே
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்
கர்ப்பத்தை கலைக்கவும் காசே
காசே காசே காசே… (சென்னை)
தீம்தனக்கு தீன் தீம்தனக்குதீன்…
கட்சி நூறுடா கொள்கை இல்லேடா
கரன்சியை நீட்டுடா கைமேல போடுடா
ஊர்வலம் போனா காசே வன்முறை செஞ்சா காசே
சாதி சங்கம் காசே ஆ… சந்தன மரமும் காசே
கூட்டணி சிறந்தா காசே தீக்குளிக்கவும் காசே
பொறம்போக்கு நிலமும் காசே
அட இலவசம் கூட காசே
ஏ கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க
யூதாஸ் வாங்கினான் காசே
காசின் மதிப்பை அறியா மனிதன் உலகில் செல்லா காசே
காசே காசே காசே…… (சென்னை)