Adi poonguyile

அடி பூங்குயிலே
Year
Language

ஆண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண்குழு: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

***

ஆண்: ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா

பெண்: மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா

ஆண்: சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வச்சதென்ன
என்னென்னவோ இஷ்டமா

பெண்: கூவாம கூவுறியே கூ-கூ கூ-கூ பாட்டு
மாத்தாம மாத்திபுட்ட சொக்கு போடி போட்டு

ஆண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்குழு: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

***

பெண்: ஊரைஎல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே

ஆண்: சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

பெண்: வேரு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

ஆண்: பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு

பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

பெண்குழு: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

ஆண்: வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

பெண்குழு: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

āṇ: aḍi pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu

aḍi pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu
yāriḍattil uṉ maṉasu poccu
nūla pola uṉ uḍambu āccu

pĕṇ: aḍi pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu
yāriḍattil uṉ maṉasu poccu
nūla pola uṉ uḍambu āccu
vaṭṭam iṭṭu suttum kaṇṇu vīccu
vāya viṭṭu poṉadĕṉṉa peccu

pĕṇguḻu: pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu

***

āṇ: āttaṅgarai andappuram ākki kŏḽḽavā
anda akkaraikkum ikkaraikkum koṭṭai kaṭṭavā

pĕṇ: māmaṉ kaiyil pūvai tandu sūḍi kŏḽḽavā
aḍi āsaiĕṉṉum ūñjal kaṭṭi āḍi kŏḽḽavā

āṇ: sŏllu sŏllu tiṭṭamĕṉṉa sŏlluvadu kaṣṭamā
pŏtti pŏtti vaccadĕṉṉa
ĕṉṉĕṉṉavo iṣṭamā

pĕṇ: kūvāma kūvuṟiye kū-kū kū-kū pāṭṭu
māttāma māttibuṭṭa sŏkku poḍi poṭṭu

āṇ: yāriḍattil uṉ maṉasu poccu
nūla pola uṉ uḍambu āccu

pĕṇguḻu: pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu

***

pĕṇ: ūraiĕllām sutti vanda ŏttakkiḽiye
ippo oriḍattil niṇḍradĕṉṉa sŏllu kiḽiye

āṇ: sŏnda pandam yārum iṇḍri vanda kiḽiye
ŏru sŏndam ippo vandadĕṉṉa vāsal vaḻiye

pĕṇ: veru viṭṭa ālaṅgaṉṉu vāṉam tŏḍa pākkudu
vāṉam tŏḍum āsaiyila mĕlla mĕlla pūkkudu

āṇ: pū pūvā pūkka vacca māmaṉ avaṉ yāru
pāḍugiṟa pāṭṭuladāṉ nīyum adai kūṟu

pĕṇ: yāriḍattil uṉ maṉasu poccu
nūla pola uṉ uḍambu āccu

pĕṇguḻu: pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu

pĕṇ: yāriḍattil uṉ maṉasu poccu
nūla pola uṉ uḍambu āccu

āṇ: vaṭṭam iṭṭu suttum kaṇṇu vīccu
vāya viṭṭu poṉadĕṉṉa peccu

pĕṇguḻu: pūṅguyile pūṅguyile keḽu
nī pāṭṭĕḍutta kāraṇatta kūṟu