வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..
அன்பை நான் கண்டேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பால்தானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞாபம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..
மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
(வாழ்க்கையே வேஷம்..)