உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே...
மனம் இன்று கொண்டாடுதே..
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே...
இன்று புதுப்பண் பாடுதே...
உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
கையில் உன்னை நான் ஏந்தவா?
செல்லம் கொஞ்சி தாலாட்டவா?
முதல்முறை தாவணியில் நான் தெரிந்த நாளை
மனம் இன்று அசைபோடுதே...
பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேளை
மெளனம் என்னை பந்தாடுதே...
காதல் வந்தால் கண் பார்த்து பேசுவதேனோ!
காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ!
நதியில் பூவிழுந்தால் மேலே நீந்திடுமே...
நதியில் கல் விழுந்தால் அது ஆழம் சென்றிடுமே...
மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ...
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ...
உடலின் தீ விழுந்தால் உடனே அணைந்திடுமே...
மனதில் தீ விழுந்தால் அது அணைத்தால் எழுந்திடுமே...
உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
கூச்சம் வந்தால் அச்சங்கள் வருவது ஏனோ...
அச்சம் இருந்தும் மச்சங்கள் மலர்வதும் ஏனோ...
கைகள் தீண்ட வந்தால் வளையல் தடுத்திடுமே...
மீண்டும் தீண்ட வந்தால் அது உடைந்திட துடித்திடுமே...
ஏக்கம் வந்தால் எல்லாமும் தொலைவதும் ஏனே...
எல்லாம் தொலைந்தும் என்நெஞ்சம் தேடுவதேனோ...
தொலைவது எல்லாமே மீண்டும் கிடைத்திடத்தான்
கிடைப்பது எல்லாமே நாம் மீண்டும் தொலைத்திடத்தான்...
உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போல...
மனம் இன்று கொண்டாடுதே........
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே...
இன்று புதுப்பண் பாடுதே...
உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
கையில் உன்னை நான் ஏந்தவா?
செல்லம் கொஞ்சி தாலாட்டவா?