கேளாமலே கேளாமலே
பாய்கிறாய் எனக்குள்ளே!
நாளேழுமே நாளேழுமே
தோய்கிறாய் எனக்குள்ளே!
மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய்
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட
அண்டங்கள் போதாதென நான் கண்டேன்!
நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட
நேரங்கள் போதாதென நான் கண்டென்!
யாரும் புகா ஆழத்தில் உன்னுள்ளே
நீந்துதல் இன்பமென நான் கண்டேன்!
மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய்
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....
நான் நீங்கிச் செல்லும் நேரத்தில் நீயுன்னை
உள்வாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டேன்!
நான் சிந்திச்செல்லும் முத்தங்கள் வீழும்முன்
நீ தாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டென்!
ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்
ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்!
மேலும் கீழும் மேலும் கீழும்
அலைகளின் மடியிலே ...
மிதவையாய் நீ ஆகிறாய்
வானம் ஏறி மேகம் கீறி
தூறல் தின்னும் பறவையாய்...
போகிறாய்....