Rojaakkale nam

ரோஜாக்களே நம்
Year
Language

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே 
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே 
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே 
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பறவைகளாய் பறவைகளாய் 
பறக்கும் சின்ன வயதினிலே 
கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே 
பவல் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே 
மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே 
மனதில் மனதில் இசையின் சாரலே 
இதுதான் வாழ்வில் இனிய நாட்களே 
நினைத்து நினைத்து மகிழ்வதனால் வாழ்கை இனிக்குமே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனி சால்வை போர்த்துமே 
பூந்தூரலே சாமரங்கள் வீசுமே 
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே 
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே

மலர்களிடம் மலர்களிடம் தேனைக் கொஞ்சம் கேட்போமே 
விழிகள் தரும் கனவுகளில் தேனை அள்ளி தெளிப்போமே 
அனைவருமே விரும்பிடவே பாசத்தோடு இருப்போமே 
புன்சிரிப்பை பரிசளித்து மனதை கொள்ளை அடிப்போமே 
குழந்தை பருவம் சுகத்தின் எல்லையே 
இதனை வாங்க விலைகள் இல்லையே 
வாழ்வில் என்றும் மறுபடியும் கிடைப்பதில்லையே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே 
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

rojākkaḽe nam nĕñjil pūkkume 
vāṉ megame paṉic cālvai porttume 
pūndūrale sāmaraṅgaḽ vīsume 
nam kaṇṇile kavidaigaḽum pūttiḍume 
raṅgoli kolam pola vāḻgai vaṇṇam āgume

rojākkaḽe nam nĕñjil pūkkume 
vāṉ megame paṉic cālvai porttume

paṟavaigaḽāy paṟavaigaḽāy 
paṟakkum siṉṉa vayadiṉile 
kavalaigaḽai kavalaigaḽai kāṭril paṟakka viḍuvome 
paval malli pavaḽa malli pūkkum aḻagai rasippome 
maṇikkaṇakkil pūkkaḽiḍam araṭṭai aḍittu sirippome 
maṉadil maṉadil isaiyiṉ sārale 
idudāṉ vāḻvil iṉiya nāṭkaḽe 
niṉaittu niṉaittu magiḻvadaṉāl vāḻgai iṉikkume

rojākkaḽe nam nĕñjil pūkkume 
vāṉ megame paṉi sālvai porttume 
pūndūrale sāmaraṅgaḽ vīsume 
nam kaṇṇile kavidaigaḽum pūttiḍume 
raṅgoli kolam pola vāḻgai vaṇṇam āgume

malargaḽiḍam malargaḽiḍam teṉaik kŏñjam keṭpome 
viḻigaḽ tarum kaṉavugaḽil teṉai aḽḽi tĕḽippome 
aṉaivarume virumbiḍave pāsattoḍu iruppome 
puṉcirippai parisaḽittu maṉadai kŏḽḽai aḍippome 
kuḻandai paruvam sugattiṉ ĕllaiye 
idaṉai vāṅga vilaigaḽ illaiye 
vāḻvil ĕṇḍrum maṟubaḍiyum kiḍaippadillaiye

rojākkaḽe nam nĕñjil pūkkume 
vāṉ megame paṉic cālvai porttume