வானம் என்ன வானம்
தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்
நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்
விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் ( வானம் என்ன வானம்)
நெஞ்சிலே இந்த நெஞ்சிலே
கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே
வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா
கடலுக்கிங்கே கைகள் தட்ட
கற்றுத் தந்திடலாம்
பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி
பறக்கச் சொல்லிடலாம் (வானம் என்ன )
சொந்தமாய் ஒரு சூரியன்
அந்த வானத்தைக்கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய்
ஒரு வானத்தத செய்தால் என்ன
ஏ பூவே பூவே
என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே!
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே! (வானம் என்ன)