Pooppola teeppola

பூப்போல தீப்போல
Work
Year
Language

பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பூவுக்குள்ளே பிறந்ததால் வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளர்ந்ததால் வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும் எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்

அடி பிரியசகி சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ சிரித்து சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கொடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே

அடி பிரியசகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

pūppola tīppola māṉbola maḻaibola vandāḽ
kāṭrāga neṭrāga nāṉ pāḍum pāṭṭāga vandāḽ
kaṉavukkuḽ alla kaṟpaṉai alla
varamāga svaramāga uyir pūviṉ tavamāga vandāḽ
aḍi piriyasagi sŏlli viḍavā
kŏñjam kavidaiyāy kiḽḽi viḍavā
anda nilavai ĕḍuttu kavari vīsavā
ĕndaṉ idayam kŏḍuttu idayam vāṅgavā

pūvukkuḽḽe piṟandadāl vāsaṅgaḽāl pesugiṟāy
vĕṇṇilavil vaḽarndadāl vĕḽiccam koḍi vīsugiṟāy
maṅgaiyiṉ kaṉṉattil mañjaḽiṉ vaṇṇaṅgaḽ vandadum ĕppaḍiyo
mālaiyiṉ vĕyilum kālaiyiṉ vĕyilum serndadāl ippaḍiyo
aḍi pūmiye nūlagam pūkkaḽe puttagam ĕṇḍru nāṉ vāḻndu vandeṉ
iṇḍru pĕṇgaḽe nūlagam kaṇgaḽe puttagam uṉṉiḍam kaṇḍu kŏṇḍeṉ

aḍi piriyasagi sŏlli viḍavā
anda nilavai ĕḍuttu kavari vīsavā
ĕndaṉ idayam kŏḍuttu idayam vāṅgavā

puṉṉagaiye podumaḍi pūkkaḽ kūḍa tevaiyillai
kaṉṉakkuḻi aḻagile tappittu poṉadu yārumillai
soḻiyai polave toḻi nī sirittu sodaṉai poḍugiṇḍrāy
nāḻigai nerattil tāḻiṭṭa maṉadil sāviyai poḍugiṇḍrāy
ŏru āyiram kŏḍigaḽ yuttaṅgaḽ sandikka tuṇivum irukkude
uṉ pārvaigaḽ modiḍa kāyaṅgaḽ kaṇḍiḍa idayam nŏṟuṅgude

aḍi piriyasagi sŏlli viḍavā
kŏñjam kavidaiyāy kiḽḽi viḍavā
anda nilavai ĕḍuttu kavari vīsavā
ĕndaṉ idayam kŏḍuttu idayam vāṅgavā