ஏ கண்ண கட்டி காத்துல 
சரக்கடிச்சா மப்புல 
சரிக்கடிச்சி கேட்குதடா 
கொண்டுவா மாப்புள்ள 
உப்புக்கரி அடுப்புல எப்பவரும் மாப்புள்ள 
பெரட்டுக்கரி திங்கத்தான்டா பொறப்பு மாப்பிள்ள 
சாதிசனம் காத்திருக்க ஆட்டுக்கடா வேகுதடா 
காட்டுப்பையன் கூட்டத்துக்கு 
கரிக்கொழம்பே கடவுளடா 
பச்சக்கரி வாசத்துக்கே எச்சிவிடும் பயல்களுக்கு 
சொத்துக்கரி எடுத்துவச்சா சொத்துக்கூட உதிரியடா 
டேய் டேய் ஹேய் ஹேய்
ஏ கண்ண கட்டி காத்துல 
சரக்கடிச்சா மப்புல 
சரிக்கடிச்சி கேட்குதடா 
கொண்டுவா மாப்புள்ள 
சோறு இலைபோட்டு விருந்தேவச்சாலும் 
திருட்டுக்கரிதான்டா ருசி அதிகம் 
வருத்த கரி திண்ணு வருஷம் மூனாச்சி 
வயிறே வெடிச்சாத்தான் வெறி அடங்கும் 
சுவரெட்டிய மொத சுட்டுத்திண்ணு 
எவன் தடுத்தாலும் ரகலப்பன்னு 
நெஞ்சிக்கறி வச்சி வறுவல்பன்னு 
நெஞ்சி இரும்பாக்கும் நொறுக்கித்திண்ணு 
ஈரல் துண்டு இல மாறிப்போனா 
பத்து கூடாரம் போர்க்கலந்தான் 
ஆட்டுக்காலு சாறு குடிச்சா 
அடங்காது அலப்பறதான
ஏ கண்ண கட்டி காத்துல 
சரக்கடிச்சா மப்புல 
சரிக்கடிச்சி கேட்குதடா 
கொண்டுவா மாப்புள்ள 
காஞ்ச மிளகாயும் பூண்டும் தேங்காயும் 
சேர்த்தா ருசி கூடும் தொவஞ்சதுக்கு 
பட்ட சாராயம் வயித்த புண்ணாக்கும் 
மருந்தா அத்தோட குடலிருக்கு 
சண்டவந்தா முட்டி தூக்கிப்போட 
உன்ன வலுவாக்கும் தலக்கரிதான் 
உன்ன உசுப்பேத்தும் தொடக்கரிதான் 
இரத்தம் கொஞ்சம் பட்ட சரக்கும் கொஞ்சம் 
பட்டா உனக்குள்ள உறுமும் சிங்கம் 
ஏ ஆட்டு மூளைய வரட்டித்திண்ணா 
புலிகாள வேகம் வரும் 
ஏ கண்ண கட்டி காத்துல 
சரக்கடிச்சா மப்புல 
சரிக்கடிச்சி கேட்குதடா 
கொண்டுவா மாப்புள்ள