அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் (2)
என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலவைக் காட்டித் தேற்றினாய்
அன்பே அன்பே ....
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை (2)
வழி தரும் கால் முகிலே
நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒலி தரும் இன்னிசையே
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சருகிறதே
ஓ அன்பே அன்பே ....
உன்னைப் பார்க்க கூடாது என
கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்
உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு
உடைகளின் நீதியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ
ஓ அன்பே அன்பே ....