ஆண்: பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா (பளபளக்குற பகலா நீ...)
(இசை...)
ஆண்: எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூரிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ (பளபளக்குற பகலா நீ...)
(இசை...)
ஆண்: இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும் (பளபளக்குற பகலா நீ...)