Alagooril poottavale

அழகூரில் பூத்தவளே
Work
Year
Language

அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
ம்..ம்..ம்..ம்..ம்..ம்..
நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா

நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி

இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழைக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்

ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே

நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்

குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி

அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா

என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்
ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே
ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே
ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே
உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

aḻagūril pūttavaḽe ĕṉṉai aḍiyoḍu sāyttavaḽe
maḻaiyūriṉ sāralile ĕṉṉai mārboḍu serttavaḽe
uṉai aḽḽittāṉe uyir nūlil korppeṉ
uyir nūlil korttu udirāmal kāppeṉ
aḻagūril pūttavaḽe ĕṉṉai aḍiyoḍu sāyttavaḽe
m..m..m..m..m..m..
nī uḍutti poṭṭa uḍai ĕṉ vayadai meyumaḍā

nī suruṭṭi poṭṭa muḍi modiramāy āgumaḍi

imaiyāle nī kirukka idaḻāle nāṉ aḻaikka
kūccam iṅge kūccappaṭṭu pogiṟade

saḍaiyāle nī iḻukka iḍaimele nāṉ vaḻukka
kāyscalukkum kāyscal vandu vegiṟade

ĕṉṉai tiriyākki uṉṉil viḽakkeṭri ĕnnāḽum kāttiruppeṉ

hoy hoy aḻagūril pūttavaḽe ĕṉṉai aḍiyoḍu sāyttavaḽe

nī muṟikkum sombalile nāṉ ŏḍiñju sāñjiḍuveṉ

nī iḻukkum mūccukkuḽḽe nāṉ iṟaṅgi tūṅgiḍuveṉ

kuṟilāga nāṉ irukka nĕḍilāga nī vaḽarkka
sĕṉṉai tamiḻ saṅgattamiḻ āṉadaḍi

aṟiyāmal nāṉ irukka aḻagāga nī tiṟakka
kādal maḻai āyuḽ varai tūrumaḍā

ĕṉṉai maṟandālum uṉṉai maṟavāda nĕñjoḍu nāṉiruppeṉ
hoy hoy hoy aṉbūril pūttavaṉe
hmm hmm ĕṉṉai aḍiyoḍu sāyttavaḽe
hmm hmm hmm maḻaiyūriṉ sāralile
hmm hmm ĕṉṉai mārboḍu serttavaḽe
uṉai aḽḽittāṉe uyir nūlil korppeṉ
uyir nūlil korttu udirāmal kāppeṉ